Tuesday, September 1, 2009
Jamakaran VS Jamakaran
ஜாமக்காரன் பத்திரிக்கைக்கென்று ஒரு விசுவாசிகள் கூட்டம் உண்டு. இந்த பகுதியில் ஜாமக்காரன் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் ஊழியம் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவர் என்னதான் தன்னுடைய வாசகர்களுக்கு சொல்லவருகிறார் என்பதில் குழப்பம் விளைவிக்கிறார் என்பதே உண்மை. CSI சபைகளில் நடக்கும் அவலங்களையும் விவரிக்கிறார், பெந்தெகோஸ்த் ஊழியர்களை சாடுவது இவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல. என்னுடைய கேள்வியும் பெரும்பாலான வாசகர்களின் கேள்விகளும் வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் என நினைக்கிறேன். முதலாவது மற்றவைகளது 'தரிசனங்களை' குறைகூறும் இவர் இந்த ஜாமக்காரன் ஊழியத்துக்கு வந்ததே இவர் 'இயேசுகிறிஸ்து'வை தரிசித்ததால்தான் என்று ஒரு கையேடே வெளியிட்டிருக்கிறார். ஆக இவர் 'தரிசித்த' இயேசுகிறிஸ்து மட்டும் original மற்றவர்கள் தரிசனங்கள் எல்லாம் பொய்! இரண்டாவதாக எல்லோரையும் குறை கூறும் இவர் எந்த சபையைத்தான் சார்ந்திருக்கச் சொல்லுகிறார் என்று வாசகர்களுக்கு தெளிவுபடுத்துவதில்லை.
Subscribe to:
Posts (Atom)