Wednesday, May 19, 2010

Blessing TV

இன்று இரவு (14/03/2010 இரவு 9.30க்கு) ஆசீர்வாதம் டீவியில் பார்த்த (கேட்ட) ஒரு சம்பவம். ஊழியக்கார் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார், அவரின் பிரசங்கத்தில் அவர் சொன்ன ஒரு காரியம், என்னவென்றால், அவர் ஜெபிக்கும் போது தேவ மகிமை வந்து அவரை மூடுமாம். அந்த மகிமையின் சுற்றளவு 3 கிலோமீட்டராம். அதாவது அந்த 3 கி.மிக்குள் சாத்தான் புக மாட்டானாம், அதற்கு அந்த பக்கம் தான் அவனால் இருக்க முடியுமாம். அதாவது தேவனின் மகிமை சுமார் 3 கி.மி வரை தான் என்று இவர் சொல்லுகிறார். என்ன வேடிக்கையான பிரசங்கம். தேவ மகிமையை இப்படி கொச்சை படுத்தி பேசுவதை மக்களும் அல்லேலூயா, மற்றும் ஆமென் சொல்லி ஆமோதிக்கிறார்கள். இவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும், எப்படி பேசினாலும் தேவன் மாத்திரம் இவர்களிடத்தில் பிரசன்னம் ஆகி விடுகிறாரே, எப்படி!? மேலும் தீட்டு உள்ள இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! அதாவது தேவனின் சர்வவல்லமைத்தனத்தை கேலி பண்ணுகிறார்கள் இவர்கள். இவர்களுடன் தேவன் நரகத்திற்கு கூட சென்று இவர்களுக்கு நரகத்தை காண்பித்து வருவாராம், ஆனால் தீட்டு இருக்கும் இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! எப்படி தான் வேதத்தை அறிந்தவர்கள் இதர்கு ஆமென் அல்லேலூயா சொல்லி கேட்கிறார்களோ!

இப்படி பட்ட அநேக வேடிக்கையான பிரசங்கங்கள் இன்னும் இருக்கிறது. இவர்கள் பேசுவதை கேட்பதற்கு பதில் "சிரிப்பொலி" "ஆதித்தியா" போன்ற முழு நேர நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்கலாமே. அங்கே இவர்களை போல் தேவனை கொச்சை படுத்துவது கிடையாது. இவர்களின் பிரசங்கங்களில் பெரும்பாலும் இவர்களிடம் தேவன் வந்து பேசி இருப்பார், அல்லது இவர்கள் பரலோகம், அல்லது நரகம் விஸிட் அடித்து விட்டு வந்திருப்பார்கள்.

அன்புள்ளவர்களே தயவு செய்து இப்படி பட்ட பிரசங்கங்களினால் கலங்கி நிற்க வேண்டாம். வேத வசனம் மாத்திரமே உண்மை, மனிதர்கள் பொய்யர்கள் என்கிறது வேதம். வேத சத்தியத்தை நம்புவோம், இப்படி பட்ட போதனைகளை விட்டு விலகி இருப்போம்.


No comments: